செந்தமிழ்சிற்பிகள்

மு.சி.பூரணலிங்கனார் (1866 - 1947)

மு.சி.பூரணலிங்கனார்

(1866 - 1947)

அறிமுகம் 

மு. சி. பூரணலிங்கம் அவர்கள் ஒரு தமிழறிஞர், கல்லூரிப் பேராசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டினருக்கும் அறிமுகப்படுத்திய மாபெரும் தமிழ் அறிஞர். ‘ஞான போதினி’ என்ற அறிவியல் இதழ், ‘ஜஸ்டிஸ்’ எனும் ஆங்கில இதழ், ‘ஆந்திரப் பிரகாசிகா’என்ற தெலுங்கு இதழை நடத்தினார். தமிழில் 18 நூல்கள், ஆங்கிலத்தில் 32 நூல்கள் மற்றும் சட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார். முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் இவர் எழுதிய ‘ராவணப் பெரியோன்’ உள்ளிட்ட ஏராளமான திறனாய்வு நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.